×

குலசேகரன்பட்டினத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொரூபங்கள் செய்யும் பணி தீவிரம்

உடன்குடி: கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் கிறிஸ்துவில் பிறப்பை குறிக்கும் வகையில் சொரூபங்கள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. றிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் சவேரியார் கோயில் தெரு பகுதியில் இயேசுநாதர், மாதா, அந்தோணியார் மற்றும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதற்கு தேவையான சொரூபங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சொரூபங்கள் வேளாங்கண்ணி, கேரளா, கோவா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தயார் செய்து அனுப்பபட்டு வருகிறது.

தத்ரூபமாக செய்யப்படும் சொரூபங்கள் சிமென்ட், பிளாஸ்டர்மாவு, பைபர் உள்ளிட்ட பல்வேறு கலவைகளின் மூலம் தயார் செய்யப்பட்டு தொடர்ந்து வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு வருகிறது. 6 இன்ச் முதல் 20 அடி உயரம் கொண்ட சொரூபங்கள் தயார் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சொரூபங்கள் செய்யும் ரவி என்பவர் கூறுகையில் ‘‘பல்வேறு வகையான மாதா, இயேசுநாதர் சொரூபங்கள் செய்து நாட்டின் பலபகுதிகளுக்கும் அனுப்பி வருகிறோம். தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பு சொரூபங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுவதுடன், விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது’’ என்றார்.

The post குலசேகரன்பட்டினத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொரூபங்கள் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Kulasekaranpatinam ,Christ ,Jesus ,Mata ,Anthony ,Kudil ,Kulasekaranpatnam Saweriar Temple Street ,Rishmus festival ,Khulasekaranpatnam ,
× RELATED தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை...