×

அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. முதலமைச்சர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார் என தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்,

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி

அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் வாய்மூடி உள்ளார். அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித் ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. ஒன்றிய அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவர துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஏதும் கூறாமல் இபிஎஸ் அமைதி காத்து வருகிறார். இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் 5 எடப்பாடி பழனிசாமி அமைதி காத்தார்.

வலிக்காமல் வலியுறுத்தக்கூட எடப்பாடிக்கு மனமில்லை

அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித் ஷாவை கண்டிக்கக்கூட வேண்டாம்; “வலிக்காமல் வலியுறுத்த” கூட மனமில்லை.

அமைதியோ அமைதி – எடப்பாடி மீது ரகுபதி விமர்சனம்

அமைதி… அமைதியோ அமைதி என எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். யார் கண்ணிலும் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியை கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்; அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று.

 

The post அமைதி… அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Law ,Chennai ,Law Minister ,Ragupati ,Edapadi Palanisami ,Amitshah ,Annal Ambedkar ,Chief Minister ,Edapadi ,
× RELATED தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி : உண்மை சரிபார்ப்பகம்