×

சங்கடம் தீர்க்கும் சதுர்த்தி திருக்காட்டுப்படியில் ஐயப்பசாமி படிபூஜை

திருக்காட்டுப்பள்ளி, டிச.18: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சுற்றுவட்டார ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில்  அக்னீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் 18 படி பூஜை நேற்று நடந்தது. ஐயப்ப சுவாமிக்கு பால், சந்தனம், தேன், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அபிஷேக, அலங்கார, ஆராதனைகளை கோயில் அர்ச்சகர் குமார் செய்திருந்தார். படி பூஜை விழாவில் ஐயப்ப குருசாமிகள் பலராமன், பூவழகன், செல்வராஜ், ஐயப்ப சேவா சங்கத் தலைவர் டி. எஸ்.தியாகராஜன், செயலாளர் பா.ஜெயக்குமார் மற்றும் திரளான சுற்று வட்டார ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சங்கடம் தீர்க்கும் சதுர்த்தி திருக்காட்டுப்படியில் ஐயப்பசாமி படிபூஜை appeared first on Dinakaran.

Tags : Ayyappa Swamy Padi Pooja ,Thirukattupalli ,Ayyappa ,Agneeswarar temple ,Ayyappa Seva Sangam ,Thanjavur district ,
× RELATED ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு...