×

புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்: அதிகாரிகள் தகவல்

புழல், டிச.19: புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. புழல் ஏரியிலிருந்து கடந்த 13ம்தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 150 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று முற்றிலுமாக நின்றுவிட்டது. இதையடுத்து, புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் 500 கன அடியில் இருந்து தற்போது 200 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. பிறகு மாலை 4 மணி அளவில் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2669 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.45 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று கலக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Puzhal Lake ,Puzhal ,Water Resources Department ,Chennai ,Chembarambakkam ,Poondi ,Puzhal Lake… ,Dinakaran ,
× RELATED புழல் ஏரி நீர் இருப்பு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்வு