×

ஒன்றிய அரசு உயர் பதவிகளில் தனியார் துறை வல்லுனர்கள் 51 பேர் பணியாற்றுகின்றனர்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 51 நிபுணர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இணைச்செயலாளர்,இயக்குனர், துணைச்செயலாளர் போன்ற பதவிகளுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். மோடி தலைமையில் பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ‘லேட்டரல் என்ட்ரி’ என்ற பெயரில் அரசுப் பணியில் இல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை நியமிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில்,கடந்த 2018 முதல் இணை செயலாளர், இயக்குனர்,துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு அரசு பணியில் இல்லாத துறை சார்ந்த வல்லுனர்கள் 63 பேர் நியமிக்கப்பட்டனர். தற்போது தனியார் துறை வல்லுனர்கள் 51 பேர் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசு உயர் பதவிகளில் தனியார் துறை வல்லுனர்கள் 51 பேர் பணியாற்றுகின்றனர்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Union Minister ,New Delhi ,Union Minister of State ,Personnel ,Jitendra Singh ,Modi… ,Union Minister Information ,
× RELATED பரமக்குடியில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு