×

கருகம்பத்தூர் அருகே கண்காணிப்பு கேமராக்களை உடைத்து வீசிய மர்ம நபர்கள்

வேலூர், டிச.19: கருகம்பத்தூர் அருகே கண்காணிப்பு கேமராக்களை உடைத்து வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள், சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம், திருட்டு வழிப்பறி, வாகனங்களை வழிமறித்து நகை, பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இவற்றின் மூலம் குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கருகம்பத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கேமராக்களையும், சர்க்யூட் கனெக்சன் போர்டுகளையும் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் அடித்து அடித்து நொறுக்கி வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கருகம்பத்தூர் அருகே கண்காணிப்பு கேமராக்களை உடைத்து வீசிய மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Karugambathur ,Vellore ,Virinchipuram ,
× RELATED மாற்றங்கள் ஏற்படுத்தும் ஸ்ரீ மார்க்கபந்தீஸ்வரர்!