×

இந்தியாவுடன் 2வது மகளிர் டி20 வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: 9 விக் வித்தியாசத்தில் அபாரம்

நவிமும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், நவி மும்பையில் நேற்று முன்தினம் 2வது டி20 போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய துவக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அதன் பின் வந்தோரில் ரிச்சா கோஷ் மட்டும் சிறப்பாக ஆடி 17 பந்துகளில் 32 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீராங்கனை கேப்டன் ஹேலி மாத்யூஸ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 85 ரன் எடுத்தார். அவருக்கு துணையாக ஷிமெய்ன் கேம்ப்பெல் 29 ரன் எடுத்தார். இறுதியில் 15.4 ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 160 ரன் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக ஹேலி மாத்யூஸ் அறிவிக்கப்பட்டார்.

The post இந்தியாவுடன் 2வது மகளிர் டி20 வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: 9 விக் வித்தியாசத்தில் அபாரம் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Women's T20 ,India ,Navi Mumbai ,West Indies women's ,Dinakaran ,
× RELATED ஒரு நாள் தொடர் இன்று துவக்கம்...