×

பழனி அருகே அண்ணாமலை உறவினரான நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). ராயர் இந்தியா சிட்பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இதன் கிளைகள் கேரளா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களில் உள்ளது. இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சத்திரப்பட்டியில் பெரிய பங்களா கட்டினார். கடந்த ஓராண்டுக்கு முன்பு பழநி அருகே உள்ள புளியம்பட்டியில் செங்கல் தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார்.

இந்நிலையில், மதுரையில் இருந்து சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்குமார் வீட்டிற்கு இன்று காலை 7 மணியளவில் 6 கார்களில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது செந்தில்குமார், பணியாளர்கள் உட்பட யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிதிநிறுவன அதிபர் செந்தில்குமார், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் உறவினர் என கூறப்படுகிறது.

The post பழனி அருகே அண்ணாமலை உறவினரான நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,Annamalai ,Finance Corporation ,Palani ,Sentilkumar ,Sathirapati ,Palani, Dindigul district ,INDIA ,SIDDEND ,Kerala ,Dinakaran ,
× RELATED மத்தியபிரதேசத்தில் 52 கிலோ தங்கம், ரூ.11...