காங்கோ: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் படகில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர்,
காங்கோ தலைநகர் கின்ஷாசாவின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரில் இருந்து புறப்பட்ட இந்த படகில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. படகு ஃபிமி ஆற்றில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து.
இது குறித்து தகவலறிந்து சம்பவ பகுதிக்கு வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தத்தளித்தவர்களை காப்பாற்றினர். தீவிர தேடுதல் வேட்டையில் 25 சடலங்களை கைப்பற்றினர். மேலும் படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்தால் எத்தனை பேர் நீரில் மூழ்கினர் என்பது குறித்தான விவரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் பயணித்தவர்களில் ஏராளமானோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.