×

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவித்துள்ளார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 538 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்தார் அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் 300 விக்கெட் வீழ்த்தியவர் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

The post இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Aswin ,Delhi ,Tamil Nadu ,Ravichandran Aswin ,Kumble ,Dinakaran ,
× RELATED 2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா;...