×

ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வேளச்சேரி: வெளி மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவரது தலைமையில் எஸ்.ஐ பிரபு மற்றும் காவலர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அதில், 5 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த அஜய் பிஸ்வாஸ் (36), ரானா தத்தா (19) என்பதும், இவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சோழிங்கநல்லூர் மற்றும் பெருங்குடி பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

The post ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Adyar Prohibition Enforcement Division ,Inspector ,Meenakshi Sundaram ,Chennai ,SI Prabhu ,Central Railway Station… ,Dinakaran ,
× RELATED திருவாலங்காடு அருகே வீட்டில் மதுபானம், போதைப்பொருள் விற்றவர் கைது