×

போதைமருந்தை ஊக்குவித்தால்… ஓடிடி தளங்களுக்கு அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் ஓடிடி தளங்களுக்கு வெளியிட்டுள்ள ஆலோசனையில், ‘‘போதைப்பொருள் பயன்பாட்டை விளம்பரப்படுத்தும், கவர்ந்திழுக்கும் அல்லது முக்கிய கதாநாயகன் மூலமாக போதைப்பொருளின் பயன்பாட்டை புகழந்து பேசும் எந்தவொரு உள்ளடக்கமும் தீவிரமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இளம் மற்றும் ஈர்க்கக்கூடிய பார்வையாளர்கள் மீதான சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே ஓடிடி தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளை கடைப்பிடித்து போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் எந்தவொரு காட்சிக்கும் உள்ளடக்க மதிப்பாய்வு செய்வதில் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும், மறுப்புக்களை வெளியிடவேண்டும் அல்லது பயனர் எச்சரிக்கையை வழங்குவதில் ஒடிடி தளங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பொது நலனை கருத்தில் கொண்டு ஓடிடி தளங்கள் தாமாக முன்வந்து இந்தவழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post போதைமருந்தை ஊக்குவித்தால்… ஓடிடி தளங்களுக்கு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Ministry of Information and Broadcasting ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...