சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மண்டல தலைமை அலுவலகம் முன்பு நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஏஐடியுசி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஓப்பந்ததை உடனே பேசி முடிக்க வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும், ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படியை நீதிமன்ற உத்திரவுப்படி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாக மனு அளித்தும் இதுவரை அரசு அதனை பரிசீலிக்கவில்லை. எனவே ஏஐடியூசி சார்பில் நாளை அனைத்து மண்டலம் அலுவலகங்கள் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.