×

குட்கா முறைகேடு வழக்கில் 20,000 பக்க குற்றப்பத்திரிகையை பென்டிரைவில் தருவதை எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை நகல்களை பென் டிரைவில் வழங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை பெண் டிரைவில் வழங்க அனுமதித்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post குட்கா முறைகேடு வழக்கில் 20,000 பக்க குற்றப்பத்திரிகையை பென்டிரைவில் தருவதை எதிர்த்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chennai ,CBI ,AIADMK ,P.V. Ramana ,C. Vijayabaskar ,Police Commissioner ,S. George ,Tamil Nadu ,DGP ,D.K. Rajendran ,Dinakaran ,
× RELATED வங்கி கடன் மோசடி வழக்கில் அதிமுக மாஜி...