நியூயார்க்: அமெரிக்காவின் விஸ்கான்சின் அடுத்த மாடிசன் பகுதியில் கிறிஸ்தவ பள்ளிஇயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் ஒருவர் கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாடிசன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு ஆசிரியர், மாணவன் ஒருவன் துப்பாக்கி சூட்டில் பலியாகி கிடந்தனர். சடலங்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தியது 17வயது மாணவி. போலீசார் வருவதை பார்த்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
The post அமெரிக்காவில் பயங்கரம் பள்ளியில் மாணவி நடத்திய துப்பாக்கி சூடு: ஆசிரியர், மாணவன் பலி appeared first on Dinakaran.