- ராமநாதபுரம்
- ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம்
- தமிழ் அரசு வேளாண் தொழிலாளர்
- ஜெய்செலன்
- மாவட்ட செயலாளர்
- வேளாண் தொழிலாளர்கள் சங்கம்
- காத்தர்வேல்
- தொழிலாளர்
- தொழிற்சங்கங்கள்
- தின மலர்
ராமநாதபுரம்,டிச.18: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
ஏஐடியுசி சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், துப்புரவுப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.தமிழகத்தில் அனைவருக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நிலுவையில் உள்ள உதவித்தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
The post விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.