×

புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் ‘செகண்ட் ஹேண்ட்’ விற்பனை வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி..? உதிரி பாகங்கள் விலையும் உயரும் அபாயம்

புதுடெல்லி: புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் ‘செகண்ட் ஹேண்ட்’ வாகனங்களுக்கும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், உதிரி பாகங்கள் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் கடைகளும் நிறைய உள்ளன. அதேபோல் பெரும்பாலனான நிறுவனங்களும் தாங்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. இருப்பினும், இப்போது பழைய வாகனங்களை வாங்குபவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம் என்ற நிலையில், தற்போது அதனை 18 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. அதேபோல் தற்போது மின்சார வாகனங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. புதிய வரிவிதிப்பின்படி மேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் மறுவிற்பனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால், அது மின்சார வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையை குறைக்கும். செகண்ட் ஹேண்ட் வாகனங்களை பழுதுபார்ப்பதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் மீது ஏற்கனவே 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய வரி விதிப்பால் அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால், மோட்டார் வாகனத் துறையில் . செகண்ட் ஹேண்ட் வாகனங்களின் விற்பனைக்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இதனால் வாகனங்களுக்கான தேவை குறையும். தற்போது, பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் 1200 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் மற்றும் 4000 மிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட நீளம் கொண்ட வாகனங்களுக்கு 18 சதவீதமும், 1500 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கு 18 சதவீதமும், 1500 சிசி-க்கு மேல் இன்ஜின் திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனங்களுக்கு (எஸ்யூவி) 18 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் ‘செகண்ட் ஹேண்ட்’ விற்பனை வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி..? உதிரி பாகங்கள் விலையும் உயரும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...