×

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2-ம் போக பாசனத்திற்கு 120 நாட்கள் தண்ணீர் தீறக்க நீர்வளத்துறை உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2-ம் போக பாசனத்திற்காக 18.12.2024 முதல் 16.04.2025 வரை 120 நாட்கள் தண்ணீர் தீறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் 2024-2025-ஆம் ஆண்டின் இரண்டாம் போக பாசனத்திற்கு 18.12.2024 முதல் 16.04.2025 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டம் இடதுபுற கால்வாய் (பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி, மாரிசெட்டிஹள்ளி, பாலேகுளி, நாகோஜனஹள்ளி) வலதுபுற கால்வாய் (கால்வேஹள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஹள்ளி, காவேரிப்பட்டினம், எர்ரஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், பையூர், ஜனப்பரஅள்ளி (ஜெகதாப்) உள்ள 9012 ஏக்கர் பாசனபரப்புகள் பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2-ம் போக பாசனத்திற்கு 120 நாட்கள் தண்ணீர் தீறக்க நீர்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Water Department ,Krishnagiri Reservoir ,Chennai ,Krishnagiri District, ,Krishnagiri Circle ,Dinakaran ,
× RELATED திருமூர்த்தி அணையில் இருந்து ஜன.10-ம்...