×

கங்குவா படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறும் சூர்யா

சென்னை: சமீபத்தில் கங்குவா படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் பிளாஷ்பேக் சரித்திர காட்சிகளுக்காக சூர்யா தனது உடல் எடையை அதிகரித்து, சிக்ஸ்பேக்கிற்கு மாறி வருகிறார். இப்போது இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அவர் உடல் எடையை ஏற்றியதோடு அல்லாமல், செம ஃபிட்டாக இருப்பதையும் பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. இதற்கு முன் வாரணம் ஆயிரம் படத்துக்காக சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு சூர்யா மாறியிருந்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் அதே தோற்றத்துக்கு மாறி வருகிறார். இதற்காக கடுமையான உணவு டயட்டிலும் அவர் இருக்கிறாராம்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கங்குவா உருவாகிறது. சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி  பிரசாத் இசையமைக்கிறார்.

The post கங்குவா படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறும் சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Ganguwa ,Kodaikanal ,Suriya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...