×

செங்கல்பட்டு – கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் காயம்!!

சென்னை: செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் படுகாயம் அடைந்தார். தாம்பரம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அடிபட்ட நபரை ரயில்வே போலீசார் ரயிலிலேயே ஏற்றி வந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இளைஞர் சுய நினைவின்றி இருப்பதால் மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

The post செங்கல்பட்டு – கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chennai ,Chengalpatl ,Tambaram ,
× RELATED வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க...