×

காரைக்கால் பகுதியில் அதிகாரி போல் பேசி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

 

காரைக்கால்,டிச.17: காரைக்கால் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் கூறியதாவது: பொதுமக்களுக்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்து, அவர்கள் மும்பை அல்லது டெல்லியில் இருந்து பெடெக்ஸ் கூரியர், கஸ்டம்ஸ் அதிகாரி அல்லது சிபிஐ அதிகாரி என்றும், உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போலி பாஸ்போர்ட், சிம் கார்ட்ஸ் மற்றும் போதை பொருட்கள் உள்ளது என்று கூறுவார்கள். உங்களை கைது செய்ய உள்ளோம் என்று உங்களை மிரட்டுவார்கள்.

உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். ஆகையால் இது போன்று தங்களை யாரேனும் தொடர்பு கொண்டு கஸ்டம்ஸ், சிபிஐ அதிகாரி எனக் கூறி மிரட்டி, பணம் கேட்டால் நம்ப வேண்டாம். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் இணையவழி குற்றவாளியின் செயல் என்றும், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காரைக்கால் பகுதியில் அதிகாரி போல் பேசி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Inspector ,Praveen Kumar ,FedEx ,CBI ,Mumbai ,Delhi ,Dinakaran ,
× RELATED கொரியர் பெயரில் நடக்கும் நூதன மோசடி