×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

 

கரூர், டிச. 17: காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்நேரமும் மருத்துவர்கள் பணியிலிரு க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றிய நிர்வாகி வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கரூர் மாவட்டம் வடசேரி கிராமம், காவல்காரன்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதாரம் உள்ளது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் சிகிச்சைக்காக வருபவர்கள் இரவு பணி டாக்டர் இன்றி சிரமப்படுகின்றனர். மேலும், மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களும் கொண்டு வரப்படாமல் உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, எந்த நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Public Grievance Day ,Karur Collector's Office ,Karur ,Kavalkaranpatti Primary Health Center ,Karur District Collector's Office ,Grievance Day ,Dinakaran ,
× RELATED திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்