×

பெரியகுளம் கண்மாய் கரையை மணல் மூடை அடுக்கி பலப்படுத்தும் பணி

ஓட்டப்பிடாரம், டிச. 17:ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணியாச்சி கிராமத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த புயல் மழை காரணமாக உடையும் தருவாயில் இருந்த அங்குள்ள பெரியகுளம் கண்மாய் கரையை மணல் மூடைகள் அடுக்கி பலப்படுத்தும் பணிகளை ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் நேரடியாக மேற்கொண்டார். மணியாச்சி பெரியகுளம் கண்மாய் கடந்த இரண்டு நாட்களாக பெய்த புயல் மழை யால் அதன் கரைகள் வலுவிழந்து சேதமடைந்துகுளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் முன்தினம் இரவு இரவு மற்றும் மணல் மூடைகளை அடுக்கியும் ஜேசிபி இயந்திரம் மூலம் சரள் மண் போட்டு பலப்படுத்தும் பணிகள் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்வில் ஓட்டப்பிடாரம் பிடிஓ சசிகுமார் , மணியாச்சி பஞ். தலைவர் பிரேமா முருகன், திமுக கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி, பிரதிநிதி குமார், கொடியங்குளம் பஞ். தலைவர் அருண்குமார் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post பெரியகுளம் கண்மாய் கரையை மணல் மூடை அடுக்கி பலப்படுத்தும் பணி appeared first on Dinakaran.

Tags : Periyakulam Kanmai ,Ottapidaram ,Union Chairman ,Ramesh… ,Dinakaran ,
× RELATED பாஞ்சாலங்குறிச்சியில் மாற்றுக்கட்சியினர் தேமுதிகவில் ஐக்கியம்