×

கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இருவர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருவர் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், ஆபாசமாக பேசி வருவதாக செங்கல்பட்டு நகர காவல் துறையினர் தகவல் இடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் டில்லிபாபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கத்தியுடன் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கைதான இருவரும் செங்கல்பட்டு பெரியநத்தம் தட்டாண்மலை பகுதியை சேர்ந்த வினோத்குமார் (35) மற்றும் ஹாஜகான் (31) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, இருவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தது இருவர் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர். செங்கல்பட்டில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய இருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu City Police Department ,Chengalpattu Old Bus Station ,Dinakaran ,
× RELATED குப்பை கிடங்கு வளாகத்தில்...