- கந்தகோட்டம் முருகன் கோவில்
- சபரிமலை
- தண்டாயர்பேட்டை
- கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில்
- சென்னை
- புங்கா நகர்
- இருமுடி
தண்டையார்பேட்டை: சென்னை பூங்கா நகரில் கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில், இருமுடி கட்டுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 40 ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். இருமுடி கட்டிமுடிக்க நள்ளிரவு ஆனதால், அவர்களது உறவினர்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் இரவு தங்கியுள்ளனர். இதில், 34 வயது இளம்பெண் அங்கேயே படுத்து தூங்கியபோது, அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த பூங்கா நகர் தங்கசாலை தெருவை சேர்ந்த ரமேஷ் (45), என்பவர் இந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். சுதாரித்து எழுந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால், அங்கிருந்து ரமேஷ் தப்பியுள்ளார்.
இதுகுறித்து இந்த இளம்பெண் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் மேலாளர் குமரவேல், பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அந்த இளம்பெண், தனது தந்தை சபரிமலைக்கு செல்வதால், இருமுடி கட்ட இந்த கோயிலுக்கு வந்துள்ளார். இரவு நீண்ட நேரமானதால், இனிமேல் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால், கோயில் மண்டபத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, காவலாளி ரமேஷ் இவரிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சபரிமலை சென்ற தந்தையை வழியனுப்ப வந்த போது கந்தகோட்டம் முருகன் கோயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காவலாளி கைது appeared first on Dinakaran.