×

பெண் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்

பெரம்பூர்: அயனாவரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நிர்மலா (38). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் 98வது வட்ட தலைமை பொறுப்பாளராக உள்ளார். இவர் கணவனை இழந்த நிலையில் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 11ம் தேதி பைக்கில் வந்த போது பின்னால் காரில் வந்தவர் தொடர்ந்து ஹாரன் எழுப்பினார். இதனால் எரிச்சல் அடைந்த நிர்மலா காரில் இருந்தவரை கண்டித்ததாக தெரிகிறது. அதற்கு காரில் இருந்தவர் நிர்மலாவை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் அளித்தார். கார் ஓட்டி வந்து தகராறில் ஈடுபட்டவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர், அயனாவரம் வி.பி காலனி பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார் (38) என்பது தெரிய வந்தது. ஏற்கனவே இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் அயனாவரம் காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீஷ் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Nirmala ,Thiruvalluvar Nagar, Ayanavaram ,Tamil Nadu ,Vetri Kagamagan ,Dinakaran ,
× RELATED உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை...