- கேரளா
- இந்தியா
- பினராயி விஜயன்
- திருவனந்தபுரம்
- முதல் அமைச்சர்
- யூனியன் அரசு
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
- வயநாடு…
திருவனந்தபுரம்: கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது என பேரிடர் மீட்புப் பணி செய்ததற்காக கட்டணம் கேட்ட ஒன்றிய அரசுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசு கேரள மக்களை பழிவாங்குகிறது. வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 கிராமங்கள் அழிந்தன. ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. இத்தகைய பேரழிவு நடந்தபோதிலும் ஒன்றிய பாஜக அரசு கேரளாவைக் கண்டு கொள்ளவில்லை. இதுவரை கேரளாவுக்கு எந்த நிவாரண நிதியும் ஒன்றிய அரசு வழங்க வில்லை. கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது என்பதை மோடி உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
The post கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது: பினராயி விஜயன் appeared first on Dinakaran.