×

புத்தக விழாவில் பங்கேற்காமல் இருக்க திருமாவளவனுக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மதுரை: நடிகர் விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் இருக்கும்படி விசிக தலைவர் திருமாவளவனுக்கு நான் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள், கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஆகியவற்றை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருமாவளவனுடன் கடந்த 2001 முதல் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் கூட அவர் என்னுடன் சகோதரத்துவமாக பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்க கூடாது என நான் அவருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர் அறிவார்ந்தவர். எவரின் அழுத்தத்தையும் ஏற்று செயல்பட மாட்டார்.

தமிழகத்தில் பெரும் மழை பெய்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நேரில் ஆய்வு செய்தேன். இந்த நூலகத்தை இதுவரை 13,59,996 பேர் பயன்படுத்தி உள்ளனர். வெளியில் இருந்து வாசகர்கள் தாங்கள் கொண்டு வரும் புத்தகங்களை அமர்ந்து படிக்க வசதியாக நூலகத்திற்கு அருகிலேயே 3 தளங்களைக் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

The post புத்தக விழாவில் பங்கேற்காமல் இருக்க திருமாவளவனுக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Minister E.V.Velu ,Madurai ,Minister ,E.V.Velu ,Vishik ,Vijay ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...