×

கூடலூரில் பரபரப்பு மயானத்துக்கு செல்லும் பாதையை கால்வாய் வெட்டி தடுத்த வனத்துறை அதிகாரிகள்: சமரச பேச்சுக்கு பின்பு நீக்கம்

கூடலூர்: கூடலூரில் மயானத்துக்கு செல்லும் பாதையில், கால்வாயை வனத்துறை அதிகாரிகள் வெட்டி தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சமரச பேச்சுக்கு பின்பு நீக்கம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் இரண்டாவது மைல் தட்டக்கொல்லி காலனியில் இருந்து செல்லும் மீனாட்சி எஸ்டேட் பகுதி இணைப்பு மன் சாலை பல்வேறு பகுதி மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இங்குள்ள பொது மயானத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. வனப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் நிலையில் சாலையின் குறுக்கே கடந்த சில தினங்களுக்கு முன் வனத்துறை அதிகாரிகள், கால்வாய் வெட்டி வாகனங்கள் செல்ல முடியாத அளவில் தடுத்து உள்ளனர்.

இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் ஏற்படுத்திய தடையை நீக்கக்கோரி தட்டக் கொல்லி, வேடன் வயல், செலுக்காடி பகுதி பொதுமக்கள் சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட கால்வாயை வனத்துறையினர் சீரமைத்தனர். உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்திய அனைத்து அரசு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post கூடலூரில் பரபரப்பு மயானத்துக்கு செல்லும் பாதையை கால்வாய் வெட்டி தடுத்த வனத்துறை அதிகாரிகள்: சமரச பேச்சுக்கு பின்பு நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Meenakshi Estate ,Thattakoli Colony ,Gudalur, Nilgiris ,Dinakaran ,
× RELATED கூடலூரில் 27ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்