×

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் காரில் சென்ற 6 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மானியம் பலோட் மாவட்டத்தில் டோண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட பானுபிரதாபுரா-டல்லிராஜரா சாலையில் சௌரபவாடா அருகே அதிகாலையில் எதிரே வந்த கார் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் இறந்தனர், 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ராஜ்நந்த்கான் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. விபத்து நடந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பல மணி நேர முயற்சிக்கு பிறகு அப்பகுதி மக்கள் உதவியுடன் காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

காரில் இருந்தவர்கள் துண்டியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கிராமமான குரேடாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் காரில் சென்ற 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Balod district of ,Chhattisgarh ,Raipur ,Saurabawada ,Banupratapura-Dallirajara road ,Dondi police station ,Balod district ,Rajnandkhan ,Balod district of Chhattisgarh ,Dinakaran ,
× RELATED ஆயுதங்களை கீழே போட்டு...