- ஐக்கிய கிறிஸ்துமஸ் விழா
- தஞ்சாவூர்
- ஜனாதிபதி
- ஐக்கிய தேவாலயங்கள்
- பிஷப்
- தஞ்சாவூர் மறைமாவட்டம்
- சகாயராஜ்
- கிறிஸ்து
- தஞ்சாவூர் மறைமாவட்ட…
தஞ்சாவூர் டிச.16: தஞ்சாவூர் மாநகர அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஐக்கிய கிறிஸ்துமஸ் கலைவிழா நடைபெற்றது. தஞ்சை மாநகர அனைத்து ஐக்கிய சபைகளின் தலைவரும், தஞ்சை மறைமாவட்டத்தின் ஆயருமான சகாயராஜ் தலைமை வகித்து கிறிஸ்து பிறப்பு இறைச் செய்தியை வழங்கினார். தஞ்சை மறை வட்டத்தின் அதிபர் மற்றும் இருதய பேராலயத்தின் பங்கு தந்தையுமான பிரபாகர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், தஞ்சை இருக்கக்கூடிய சிஎஸ்ஐ, டிஇஎல்சி, ஐஇஎல்சி, இசிஐ என அனைத்து கிறிஸ்தவ சபைகளும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பாடல், நடனம், நாடகம் என கலை நிகழ்ச்சிகள் வழியாக சிறப்பித்தனர்.
The post தஞ்சாவூரில் ஐக்கிய கிறிஸ்துமஸ் கலைவிழா appeared first on Dinakaran.