×

பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம்

தர்மபுரி, டிச.16: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் 50 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நடந்தது. ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்ரமணியன், ஸ்ரீதரன் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்டம் முழுவதும் உள்ள 31 காவல் நிலையங்களில் இருந்து, புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு தொடர்பாக மொத்தம் 50 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து 50 மனுக்கள் மீதும் விசாரணை முடித்து வைக்கப்பட்டது. மேலும், புதியதாக 38 மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் டிஎஸ்பிக்கள் சிவராமன், கரிகால் பாரிசங்கர், மனோகரன், மகாலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலுதேவன், பார்த்தீபன், புஷ்பராணி, அன்பழகன், எஸ்ஐக்கள் பாரூக், குப்புசாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்களிடம் குறைகேட்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Public Grievance Redressal Camp ,Dharmapuri ,Dharmapuri District Police ,SP Maheswaran… ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்