- OPS
- குல தெய்வ கோவில்
- அஇஅதிமுக
- பொது
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- அதிமுக உரிமை மீட்புக் குழு
- ஒருங்கிணைப்பாளர்
- ஓ. பன்னீர்செல்வம்
- சுவாமி
- ஆண்டாள் கோயில்
- ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்
- செண்பகத்தோப்பு வனபேச்சி அம்மன் கோவில்
- மேற்குத்தொடர்ச்சி
- ஸ்ரீவில்லிபுத்தூர்…
- பொதுக்குழு
- தின மலர்
ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து, பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு நேற்று நடைபெற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திடீரென குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு கோயிலுக்கு வந்த இடத்தில் அரசியல் பேசக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
The post அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த நாளில் குலதெய்வம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.