×

தென் கொரிய அதிபர் பதவி நீக்கம் குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும்: நீதிமன்றத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

சியோல்: தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழக்கில் விரைவாக தீர்ப்பளிக்குமாறு அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியுங் கோரிக்கை விடுத்துள்ளார். ன் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கடந்த 3ம் தேதி ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து ராணுவ சட்டத்தை அதிபர் யோல் வாபஸ் பெற்றார். அதிபரை பதவி நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான வாக்கெடுப்பில், 204 பேர் தீர்மானத்தை ஆதரித்தும், 85 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். அதிபர் பதவி நீக்கம் வெற்றி பெற்றது குறித்து யோலிடம் கேட்ட போது தான் பதவி விலக மாட்டேன் என்று தெரிவித்தார். இது தொடர்பான வழக்கை அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த நீதிமன்றம் அதிபர் பதவி நீக்கம் குறித்து 180 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவெடுக்கும். பதவி நீக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்ததும்,90 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும். ந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே மியுங் நேற்று கூறுகையில்,‘‘ யோலை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழக்கில் நீதிமன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்கவும் மக்கள் கஷ்டங்களையும் தவிர்க்க முடியும். அரசாங்கத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒத்துழைப்பை உருவாக்க சிறப்பு கவுன்சில் ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

The post தென் கொரிய அதிபர் பதவி நீக்கம் குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும்: நீதிமன்றத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : President ,Seoul ,Lee Jae-myung ,Constitutional Court ,Yoon Suk-yeol ,Dinakaran ,
× RELATED ராணுவ சட்டம் அமல் எதிரொலி தென் கொரிய...