×

மெஜாரிட்டியை இழந்தது தேஜ கூட்டணி அரசு முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதுள்ள என். ஆர் காங்கிரஸ்-பாஜ கூட்டணி பெரும்பான்மையை இழந்திருக்கிறது. பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். அவரை முதல்வர் ஆக்குவதுதான் எங்களது குறிக்கோள் எனக் கூறியுள்ளனர்.

பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏ 9 பேரில் மூன்று பேர் ஆதரவு மட்டும்தான் இந்த அரசுக்கு உள்ளது. சட்டமன்றத்தில் என் ஆர் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் என 3 பேர் கூறிக் கொண்டாலும் இந்த ஆட்சிக்கு முத்தியால்பேட்டை, திருநள்ளாறு, உருளையன்பேட்டை தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் முறைப்படி ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை.

அதன்படி பார்த்தால் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு என் ஆர் காங்கிரசின் 10 எம்எல்ஏக்களும், பாஜவில் உள்ள இரண்டு அமைச்சர்கள், ஒரு சபாநாயகர் என மூன்று பேர் ஆதரவுடன் மற்றும் 2 நியமன எம்எல்ஏக்கள் என 15 பேர் மட்டுமே ஆதரவு தருகின்றனர். ஆனால் ஆட்சிக்கு வெளியே 18 பேர் உள்ளனர். எனவே இந்த அரசு பெரும்பான்மை இழந்து இருக்கிறது. பெரும்பான்மை இழந்து விட்டதால் முதல்வர் ரங்கசாமி, ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மெஜாரிட்டியை இழந்தது தேஜ கூட்டணி அரசு முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Teja ,government ,chief minister ,Narayanasamy ,Puducherry ,Former ,Congress ,Baja ,JOSÉ CHARLES MARTIN ,Deja Coalition Govt ,Rangasami ,Dinakaran ,
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனுடன்...