×

இசைவாணி ஜாதி பற்றி வலைதளங்களில் அவதூறு: போலீசில் புகார்

சென்னை: கானா பாடகி இசைவாணி தன்னை பற்றியும், ஜாதியை பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்படி, சென்னை வடக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் விஷம செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பேச்சு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் என நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post இசைவாணி ஜாதி பற்றி வலைதளங்களில் அவதூறு: போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Isavani ,Chennai ,Chennai North Beach Police Station ,Chennai North Zone Cyber Crime Police ,Dinakaran ,
× RELATED பாடகி இசைவாணி பற்றி அவதூறு பரப்பிய...