×

கடந்தாண்டு மட்டும் வெளிநாட்டில் 86 இந்தியர்கள் மீது தாக்குதல்

புதுடெல்லி: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட வெளிநாடுகளில் கடந்தாண்டு மட்டும் 86 இந்தியர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது எம்பி ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2021ல் 29 இந்தியர்களும், 2022ல் 57 இந்தியர்களும் வெளிநாடுகளில் தாக்கப்பட்டனர்.

2023ல் மட்டும் மொத்தம் 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டனர். இதில் பலர் உயிரிழந்தும் உள்ளனர். அதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 12 பேர் மீதும், கனடா, பிரிட்டன், சவுதி அரேபியாவில் தலா 10 பேர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது’ என்று ெதரிவித்துள்ளார்.

The post கடந்தாண்டு மட்டும் வெளிநாட்டில் 86 இந்தியர்கள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,INDIANS ,UNITED STATES ,ENGLAND ,CANADA ,Union Deputy Minister ,Kirti Vardhan Singh ,MP One ,Lalakawa ,on 86 Indians Abroad ,Dinakaran ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு