×

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி.20 போட்டி: ஹென்ட்ரிக்ஸ் சதம் விளாசல்: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

செஞ்சூரியன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்கா வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி செஞ்சூரியனில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சைம் அயூப் நாட் அவுட்டாக 57 பந்தில், 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 98 ரன் அடித்தார். பாபர் அசாம் 31, இர்பான் கான் 30 ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 63 பந்தில், 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 117 ரன்னும், வான் டெர் டுசென் ஆட்டம் இழக்காமல் 38 பந்தில் 66 ரன்னும் விளாசினர். 19.3 ஓவரில் தென்ஆப்ரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது. ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி போட்டி இன்று இரவு 9.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கி நடக்கிறது.

The post பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி.20 போட்டி: ஹென்ட்ரிக்ஸ் சதம் விளாசல்: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : 2nd T20I ,Pakistan ,Hendricks ,South Africa ,Centurion ,South ,Africa ,T20I ,Dinakaran ,
× RELATED 2வது டி20 போட்டியில் பாக்.,கை துவம்சம் செய்த தென் ஆப்ரிக்கா அணி