- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- எடப்பாடி
- பழனிசாமி
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- டெல்டா
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- கடலூர்
- தின மலர்
சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
ஆற்றின் கரைகள் பல இடங்களில் பலவீனமாக இருப்பதால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அனைத்து நீர்நிலைகளிலும், நீர்வழிப் பாதைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அரசு அதிகாரிகள் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களை கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும்.
கடந்த வாரம் பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வெள்ள நீரால் பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்குமாறு ஏற்கனவே திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன். பல இடங்களில் நிவாரணங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை. எனவே, அரசின் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கன மழையால் பயிர்கள் பாதிப்பு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் appeared first on Dinakaran.