×

மின்கம்பி இன்ஜின் மீது விழுந்ததால் சென்னை ரயில் 2 மணிநேரம் தாமதம்

அருப்புக்கோட்டை: சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு அருப்புக்கோட்டை வழியாக வாரத்திற்கு மூன்று நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நேற்றிரவு 8.25 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. ரயிலை டிரைவர் மீட்டாலால் மீனா ஓட்டி வந்தார்.இன்று அதிகாலை 5.10க்கு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வந்தது. திருச்சுழி அடுத்துள்ள தொட்டியாங்குளம் பகுதியில் வந்த போது அறுந்து தொங்கிய மின்கம்பி (காப்பர்) ரயில் இன்ஜினை சுற்றியது. இதனால் ரயில் நகர முடியாமல் நின்றது. இதையடுத்து ரயில்வே பணியாளர்கள் இன்ஜினில் சுற்றியிருந்த மின்வயரை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தினர். இதனால், அருப்புக்கோட்டைக்கு 5.20க்கு வர வேண்டிய ரயில் 2 மணிநேரம் தாமதமாக 7.20க்கு வந்து சேர்ந்தது. 2 மணிநேரம் காத்திருந்ததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். மின்சப்ளை கொடுக்கப்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கம்பி காப்பர் என்பதால் மர்மநபர்கள் அறுத்து திருடி சென்றார்களா என்ற கோணத்தில் விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post மின்கம்பி இன்ஜின் மீது விழுந்ததால் சென்னை ரயில் 2 மணிநேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arapukkotta ,Chilumba Express ,Chengkotta ,Arapukkota ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...