×

எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது: அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுசெய்த பிறகு முதலமைச்சர் பேட்டி..!!

சென்னை: எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்திலுள்ள எழிலகம் கட்டிடத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பேரிடர் கால மீட்பு துறை சார்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுசெய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் அளித்த பேட்டியில்,

பேரிடர் நிதி போதுமானதாக இல்லை -முதலமைச்சர்

ஒன்றிய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை. தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டோம். மீட்பு பணிக்காக தென்காசிக்கு அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை அனுப்பி வைத்துள்ளோம். ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி ரூ.2000 பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது.

மழை நிலைமையை சந்திக்க அரசு தயார்

எவ்வளவு மழை பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சந்திக்க அரசு தயாராக உள்ளது. மழை காரணமாக மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு வந்ததாக தகவல் வரவில்லை. ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கும் முன்பு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது.

ஒரேநாடு ஒரேதேர்தல் – ஒன்றிணைந்து எதிர்ப்போம்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒன்று சேர்ந்து கடுமையாக எதிர்ப்போம். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம் என தெரிவித்தார்.

 

The post எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது: அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வுசெய்த பிறகு முதலமைச்சர் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Control Center ,Chennai ,M.K. Stalin ,Emergency Control Center ,State Emergency Control Center ,Ezhilakam ,Chepauk, Chennai… ,Dinakaran ,
× RELATED அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு