- பெரம்பலூர்
- Patalur
- செல்வராஜ்
- தட்சிணா மாதவி
- சிருகன்பூர்
- ஆலத்தூர் தாலுக்கா
- பெரம்பலூர் மாவட்டம்
- லட்சுமி
- சித்தாலி
*3 பெண் உள்பட 5 பேர் படுகாயம்
பாடாலூர் : பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் அருகே உள்ள தெற்கு மாதவியை சேர்ந்தவர் செல்வராஜ் (50). ஆட்டோ டிரைவரான இவரது ஆட்டோவில், உடல் நிலையால் பாதிக்கப்பட்ட சித்தளியை சேர்ந்த லட்சுமியை (60), அரியலூர் மருத்துவமனைக்கு நேற்று மதியம் அழைத்து சென்றார். அப்போது லட்சுமியின் உறவினர்கள் மதியழகி (37), இவரது மகன் தாமரைக்கண்ணன் (17), மருதாம்பாள் (30), ஆகியோர் ஆட்டோவில் உடன் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மதியழகன் (24), லோடு ஆட்டோவில் தஞ்சாவூரில் இருந்து மருந்து பொருட்களை ஏற்றி கொண்டு திருவண்ணாமலைக்கு லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மேலமாத்தூரில் தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது, எதிரே அரியலூர் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ மீது படுபயங்கரமாக மோதியது.
விபத்தில் சரக்கு ஆட்டோவும், ஷேர் ஆட்டோவும் உருண்டு, சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 3 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள், லோடு ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேரையும் அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பெரம்பலூர் அருகே ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.