×

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?


ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் விஜய் ஆண்டனியின் 3.0 இசை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மெட்ரோ ரெயில்களில் நேரங்கள் மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. இந்தநிலையில், ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 20 ஆயிரம் கூடினால் வசதிகள் செய்ய முடியாது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கக்கூடும். குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து விஜய் ஆண்டனியின் 3.0 இசை நிகழ்ச்சிக்கான அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் மெட்ரோ ரெயில்கள் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு? appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Alandur ,Chennai Fishery A. M. ,Vijay Antani ,Jain College ,
× RELATED விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு