×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது..!!

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் -மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே நகரும். நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Department ,Gulf of Mannar ,Kumari Sea ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக...