×

கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி ஆய்வு

கெங்கவல்லி, டிச.13: கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார், வருடாந்திர ஆய்வு பணியை நேற்று மேற்கொண்டார். அப்போது, ஆவணங்களையும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளின் விவரங்கள், காவல்துறை பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், ஆயுத பாதுகாப்பு அறை, குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் குறைகளை கேட்பது, பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

The post கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DSP ,Kengavalli ,Police Station ,Kengavalli Police Station ,Athur ,Satish Kumar ,Dinakaran ,
× RELATED நிலத்தகராறு தொடர்பாக புகாரளிக்க வந்த...