×

கொங்கணாபுரத்தில் 1,051 மூட்டை பருத்தி ரூ.25.96 லட்சத்திற்கு ஏலம்

 

இடைப்பாடி, ஜன.5: கொங்கணாபுரம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், 10,51 மூட்டை பருத்தி ரூ.25. 96 லட்சத்திற்கு விற்பனையானது. இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்திற்கு கர்நாடகா, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதியிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் சுமார் 1051 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் ரூ.25 லட்சத்து 96 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதில் பிடி ரகம் குவிண்டால் ரூ.6,700 முதல் ரூ.7,789 வரையும், டிசிஎச் ரகம் ரூ.9,500 முதல் ரூ.10,809 வரையும், கொட்டு ரகம் ரூ.3,720 முதல் ரூ.5,130 வரையும் விற்பனையானது.

The post கொங்கணாபுரத்தில் 1,051 மூட்டை பருத்தி ரூ.25.96 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Konganapuram ,Edappadi ,Konganapuram Agricultural Cooperative Producers’ Sales Society ,Thiruchengode Agricultural Cooperative Producers’ Sales Society ,Edappadi.… ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...