×

வீடு புகுந்து 4 பவுன் திருட்டு

சங்ககிரி, டிச.13: சங்ககிரி அருகே விஎன்.பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65), சலவை தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, தனது மகள் வேலுமணியுடன் இடைப்பாடிக்கு சென்று விட்டார். மாலை 4 மணிக்கு வந்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும், அதில் வைத்திருந்த 4பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கோவிந்தராஜ் நேற்று சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வீடு புகுந்து 4 பவுன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Govindaraj ,VN ,Palayam ,Idapadi ,Velumani ,Dinakaran ,
× RELATED குரங்குகள் தொல்லையால் அவதி