×

ஆர்ப்பாட்டம், ெபாதுக்கூட்டம் நடத்த போலீசார் கட்டுப்பாடு

சேலம், டிச.19: சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நடத்த 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்று சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார்அபினபு தெரிவித்துள்ளார். சேலம் மாநகரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெற்றும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு பிரிவு 41 தமிழ்நாடு மாநகர காவல்துறை சட்டம் 1888ன் படி சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்தவேண்டும்.

அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் ேபான்றவற்றுக்கு இது பொருந்தாது. டிசம்பர் 19ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார்அபினபு
தெரிவித்துள்ளார்.

The post ஆர்ப்பாட்டம், ெபாதுக்கூட்டம் நடத்த போலீசார் கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Salem ,City ,Police Commissioner ,Praveen Kumar Abhinabhu ,Salem City ,
× RELATED பிடிஓ அலுவலகம் எதிரே...