மும்பை: தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வியை சந்தித்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுபற்றி முன்னாள் வீரர் வாசிம்ஜாபர் அளித்துள்ள பேட்டி: கோஹ்லி இல்லாத நிலையில் கேப்டனாக கே.எல்.ராகுல் சரியான தேர்வா என்றால் அது இல்லை. கோஹ்லி காயம் அடைந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடையாத ரகானேவுக்கு கேப்டன் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் அணியை சிறப்பாக வழிநடத்திய ரகானே போன்ற சிறந்த வீரர் இருக்கும் போது ராகுலுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டுமா?என கேள்வி எழுப்பி உள்ள அவர், கேஎல் ராகுலுக்கு எதிராக எனக்கு எதுவும் இல்லை. இளம் வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.அவரை வருங்கால கேப்டனாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் கோஹ்லி இல்லாத நேரத்தில் ரகானே அணியை வழிநடத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கோஹ்லியின் கேப்டனை இந்தியா நிச்சயமாக தவறவிட்டது, ஏனெனில் அவர் களத்தில் அதிக ஆக்ரோஷத்தை கொண்டு வருகிறார். கோஹ்லி இல்லாததால் தான் இந்தியா 2வது டெஸ்ட்டில் வெற்றியை தவறவிட்டது. அதுவே வித்தியாசத்தை ஏற்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்….
The post தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ரகானே கேப்டனாக செயல்பட்டிருக்க வேண்டும்: வாசிம் ஜாபர் சொல்கிறார் appeared first on Dinakaran.