×

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5000க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை

சென்னை: சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை தொடங்கப்பட்ட குறுகிய காலங்களில் (18 மாதங்கள்) 5000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 538 நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1375 சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 512 பொது அறுவை சிகிச்சைகள், 1000க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மற்றும் 137 இதய பைபாஸ் மற்றும் இதய வால்வு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 10 மாதத்தில் இதயவியல் துறையில் 1,683 பேருக்கு ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகள் நடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனை குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்படுவதற்கு காரணமாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

The post கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5000க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Kalainar Centenary High Specialty Hospital ,Chennai ,Artist Centenary Hospital ,Artist Centenary Higher Specialty Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...